4,380 வாகனங்களில் நடமாடும்  காய்கறி விற்பனை அங்காடி  விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி 

by Editor / 24-05-2021 06:04:42pm
 4,380 வாகனங்களில் நடமாடும்  காய்கறி விற்பனை அங்காடி  விலை குறைவால் மக்கள் மகிழ்ச்சி 



முழு ஊரடங்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களில் காய்கறிகளை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இதனை முன்னிட்டு  இரு தினங்கள் அனைத்து கடைகளும் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. ஒரு வாரத்துக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அனைத்து காய்கறிகடைகள், மளிகை கடைகள் உள்ளிட்டவை அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
காய்கறி, பழங்கள் மக்களின் அன்றாட வைக்கு மிகவும் அவசியம் என்பதால் அவற்றை வாகனங்களில் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.கடந்த இரு தினங்களில் வியாபாரிகள் கொள்ளை லாபம் அடித்ததால் இந்த ஏற்பட்டு செய்யபட்டுள்ளது. 
அதன்படி ஒருவாரத்துக்கு நாள்தோறும் வீதிவீதியாக வாகனங்கள் மூலம் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யும் பணி தொடங்கியுள்ளது.இப்பணியை வேளாண் துறை சார்ந்த தோட்டக்கலையினர் தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை காய்கறிகள் விற்பனை செய்கின்றனர்.சென்னையில் 1,610 வாகனங்களிலும், தமிழகம் முழுவதும் 4,380 வாகனங்களிலும் காய்கறி, வழ வகைகளை விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது விலை குறைவாக காய்கறிகள் ,பழங்கள் கிடைத்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

 

Tags :

Share via