முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

by Staff / 10-12-2022 12:56:28pm
 முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு

மாண்டஸ் புயல் நள்ளிரவு 2.30 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. புயல் கரையை கடக்கும் நேரத்தில் 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது. புயல் கரையை கடந்த நேரத்தில் வீசிய பலத்த காற்றின் காரணமாக பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. மாண்டஸ் புயல் கரையை கடந்தாலும் இன்றும், நாளையும் மழை தொடரும் என கூறப்பட்டுள்ளது. மழை பாதிப்புகள் குறித்து அதிகாரிகள், அமைச்சர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.இந்த நிலையில், மாண்டஸ் புயல் பாதிப்பு குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்து வருகிறார். தென்சென்னையில் புயல் பாதித்த இடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று ஆய்வு செய்து வருகிறார். கொட்டிவாக்கம், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், பனையூர் உள்ளிட்ட இடங்களில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். புயல் பாதிப்பு தொடர்பாக முதலமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். மழை பாதிப்பு, புயல் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிய உள்ளார்.

 

Tags :

Share via

More stories