பாரதியாருக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்

by Staff / 11-12-2023 11:57:05am
பாரதியாருக்கு புகழாரம் சூட்டிய கமல்ஹாசன்

மகாகவி பாரதியாரின் 141வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் எக்ஸ் தளத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார். அதில், 'சாகாவரம் கொண்ட வரிகளைப் பாவாக்கித் தந்த புலவன், காலம் கடந்தும் எளிய அரிய கருத்துகளால் தலைமுறைகளுக்கிடையே பாலமாய் இருக்கும் சிந்தனையாளன், வரிகளைச் சொன்னாலே மூச்சிலும் சக்தி பிறக்கவைக்கும் கந்தகக் கவிதைகளுக்குச் சொந்தக்காரன் பாரதியின் பிறந்த நாள் இன்று. மரபான வடிவத்தில் நவீன கவிதையின் பிறந்த நாளாகக் கொண்டாடுவோம்' என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via

More stories