நேற்று ஆம் ஆத்மியில் இணைந்தவர் இன்று காங்கிரஸில் ஐக்கியம்

by Staff / 10-12-2022 12:51:29pm
நேற்று ஆம் ஆத்மியில் இணைந்தவர் இன்று காங்கிரஸில் ஐக்கியம்

ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த காங்கிரஸ் டெல்லி துணைத் தலைவர் மற்றும் இரண்டு கவுன்சிலர்கள் சில மணி நேரத்தில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பினர். காங்கிரஸ் டெல்லி துணைத் தலைவர் அலி மெஹ்தி, இரண்டு கவுன்சிலர்கள் சபிலா பேகம் மற்றும் நாஜியா கட்டூன் ஆகியோர் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். இவர்கள் மூவரும் வெள்ளிக்கிழமை ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த நிலையில், மீண்டும் இன்று காலை காங்கிரஸில் இணைந்தனர்.மெஹ்தி கட்சி மாறுவதாக அறிவித்ததும், அவருக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கட்சிக்கு திரும்பிய மெஹ்திக்கு கட்சி தலைவர்கள் தங்கள் ஆதரவை ஆன்லைனில் தெரிவித்தனர்.

 

Tags :

Share via

More stories

Logo