34 பணயக்கைதிகள் ஹமாஸ் சிறையிலிருந்து விடுவிப்பு

by Staff / 27-11-2023 01:03:53pm
34 பணயக்கைதிகள் ஹமாஸ் சிறையிலிருந்து விடுவிப்பு

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே பணயக்கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் சுமுகமாக நடந்து வருகிறது. ஹமாஸ் 26 இஸ்ரேலியர்களையும் 8 வெளிநாட்டினரையும் விடுவித்தது. அதே போல், சுமார் 75 பாலஸ்தீன பணயக்கைதிகளை இஸ்ரேல் விடுதலை செய்தது. சனிக்கிழமை இரவு விடுவிக்கப்பட்ட சுமார் 36 பாலஸ்தீனிய கைதிகள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மேற்குக் கரையை வந்தடைந்தனர். ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி, மொத்தம் 58 பேர் ஹமாஸாலும் 114 பேரும் இஸ்ரேலால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via