கழிவுநீர் கலப்பு; பொதுமக்கள் உள்ளிருப்பு போராட்டம்

அன்னூர் பேரூராட்சி 5-வது வார்டில் உள்ள சக்தி சாலை, கட்டபொம்மன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வருகிறது என்ற புகாரை பொதுமக்கள் எழுப்பினர். கட்டபொம்மன் நகர் பகுதியில் பழுதடைந்த உப்புத்தண்ணீர் மோட்டாரை சரிசெய்யும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும், இது தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து முழுமையான பதிலளிக்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, வார்டு உறுப்பினர் மணிகண்டன் தலைமையில் பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களுடன் சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் நேரில் பேச்சுவார்த்தை நடத்த, அதன் பேரில் அவர்கள் போராட்டத்தை முடித்து கலைந்தனர்.
Tags :