விபசாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்கள் கைது

கோவை காந்திபுரம் கிராஸ்கட் சாலையில் விபசார வழக்கில் நான்கு பெண்கள் போலீசாரால் நேற்று (ஆகஸ்ட் 5) கைது செய்யப்பட்டனர். சித்தாபுதூரை சேர்ந்த 25 வயது வாலிபரிடம் பணம் கொடுத்தால் உல்லாசம் அனுபவிக்கலாம் என கூறிய பெண்ணை போலீசார் விசாரித்ததில், பேரூரை சேர்ந்த மீனாகுமரி (34) என்பவர் மூன்று இளம் பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியது தெரியவந்தது. இதையடுத்து, மீனாகுமரியுடன் நான்கு பெண்களும் காட்டூர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
Tags :