கொரோனா தொற்று எதிரொலி  சிங்கப்பூரிலிருந்து 87,055 பேர்  இந்தியா திரும்பினர்

by Editor / 24-05-2021 06:14:52pm
கொரோனா தொற்று எதிரொலி  சிங்கப்பூரிலிருந்து 87,055 பேர்  இந்தியா திரும்பினர்



சிங்கப்பூரில் இருந்து 629 விமானங்களில் 87 ஆயிரத்து 55 பேர் இந்திய திரும்பியுள்ளனர் என்று இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் ஆட்டிப்படைத்தபோது வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்கள் நாடு திரும்ப தவித்தபோது, அவர்களை மீட்பதற்காக, ’வந்தே பாரத்’ மிஷன் தொடங்கப்பட்டது. இந்த வந்தே பாரத் மிஷன் மூலமாக வெளிநாடுகளில் தவித்த இந்தியர்கள் நாடு திரும்பி வருகின்றனர்.
கொரோனா அச்சம் ஒரு பக்கம் இருக்க, கொரோனாவினால் வேலை இழந்து, உறவுகளை இழந்து, நிம்மதி இழந்து நின்றதால் அவர்கள் இந்தியா திரும்பி வருகின்றனர்.சிங்கப்பூரில் இருந்து கடந்த ஆண்டு முதல் தற்போது வரைக்கும் வந்தே பார்த் மிஷன் மூலமாக 629 விமானங்களில் 87,055 பேர் இந்தியா திரும்பியுள்ளனர் என்று இந்திய தூதரகம் தெரிவித்திருக்கிறது.சிங்கப்பூரில் இதுவரைக்கும் 61,799 பேருக்கு தொற்று பாதித்துள்ளதாகவும், 32 பேர் உயிரிழந்துள்ளனர் என்றூம் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்திருக்கிறது. சிங்கப்பூரில் தற்போது புதிய வகை கொரொனா தொற்று பரவுகிறது. குழந்தைகளை அதிகம் தாக்குகிறது என்ற காரணத்தினாலும் இந்தியர்கள் அதிக அளவில் நாடு திரும்பிக்கொண்டிருக்கின்றனர்.

 

Tags :

Share via