மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 58 ஆயிரம் கன அடியாக நீடிப்பு.

by Staff / 30-06-2025 09:53:54am
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 58 ஆயிரம் கன அடியாக நீடிப்பு.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் தாக்கம் குறைந்து  வருவதாலும் கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டதாலும் நேற்று இரவு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 58,ஆயிரம் கன அடியாக சரிந்தது இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 58 ஆயிரம் கன அடியாக நீடிக்கிறது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 26ஆயிரம் கன அடி நீரும் உபரிநீராக உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 32 ஆயிரம் கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.அணையின் நீர் இருப்பு 93.47 டி எம் சி யாக உள்ளது.

மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் இருப்பதால் அணையில் இடது கரையில் உள்ள வெள்ளை கட்டுப்பாட்டு அறையில் நீர்வளத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீர்வரத்து திடீரென அதிகரித்தால் உபரி நீர் போக்கி மதகுகளைஉயர்த்தி நீரை வெளியேற்றும் வகையில் நீர்வளத்துறை பணியாளர்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்..உபரி நீர் போக்கி கால்வாய் பகுதிகளில் யாரேனும் குளிக்க, துணி துவைக்க, கால்நடைகளை குளிப்பாட்ட , செல்பி எடுக்க செல்கிறார்களா..? என்பதை போலீசாரும் வருவாய் துறையினரும் கண்காணித்து வருகின்றனர்.

 

Tags : மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 58 ஆயிரம் கன அடியாக நீடிப்பு.

Share via