240 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு
மதுரையில் நடைபெற்ற கல்விக்கடன் திருவிழாவில் 291 மாணவர்களுக்கு 18.51 கோடி கல்விக்கடன் வழங்கப்பட்டதாக எம்.பி சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். முகாமில் பங்கேற்று 1550 பேர் விண்ணப்பித்ததாகவும், தகுதியான 1002 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டதாகவும், இணையம் வாயிலாக 900 பேர் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு 240 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
Tags :