கைநீட்டிய கல்வித்துறை கண்காணிப்பாளர் கைதுசெய்த  லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

by Editor / 13-05-2025 09:44:11pm
கைநீட்டிய கல்வித்துறை கண்காணிப்பாளர் கைதுசெய்த  லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் திருவேங்கடம் தாலுகா செவல்குளத்தில் உள்ள செயின்ட் பவுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியான தனியார் பள்ளியில் பணிபுரிந்துள்ளார்.

 அவர் அந்த பள்ளியில் பணிபுரிந்த காலங்களுக்கு பணி அனுபவ சான்று கேட்டு பள்ளியின் தாளாளரான நாகராஜ் என்பவரிடம் விண்ணப்பித்துள்ளார். மேற்கண்ட பள்ளியில் இருந்து தாளாளர் ஆசிரியையின் பணி அனுபவ சான்றினை தயார் செய்துவிட்டு, அதில் மேலொப்பம் பெற்று அலுவல நடைமுறைகளை முடித்து தருவதற்காக தென்காசி மாவட்ட கல்வி அலுவலத்தில் (தனியார் பள்ளி) சமர்பித்துள்ளார்கள்.

 இதுசம்பந்தமாக தென்காசி மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரை சந்தித்து பேசிய போது அவர் ஆசிரியையின் பணி அனுபவ சான்றினை மேலொப்பம் பெற்று அலுவலக நடைமுறைகளை முடித்து வழங்குவதற்கு லஞ்சமாக பணம் ரூ.60,000/- கேட்டுள்ளார்.

 லஞ்சபணம் கொடுக்க விரும்பாத பள்ளியின் தாளாளர் தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறையில் கொடுத்த புகாரின்பேரில் தென்காசி தனியார் பள்ளிகளின் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் என்பவர் மீது குற்ற வழக்கு பதிவு செய்து, ரசாயனம் தடவப்பட்ட பணம் DED ரூ.60,000/-ஐ மேற்படி பள்ளியின் தாளாளர் நாகராஜ் அலுவலகத்தில் வைத்து அலுவலக கண்காணிப்பாளர் சுரேஷ்குமாரிடம் கொடுக்க அந்த லஞ்ச பணத்தை சுரேஷ்குமார் பெற்றபோது அங்கு மறைந்திருந்த தென்காசி லஞ்ச ஒழிப்புத்துறை துணைக்காவல் கண்காணிப்பாளர் பால்சுதர் மற்றும் காவல் ஆய்வாளர்ஜெயஸ்ரீ ஆகியோர் தலைமையிலான போலீசாரால் கையும் களவுமாக சுற்றி வளைத்து பிடித்து கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

 

Tags : கைநீட்டிய கல்வித்துறை கண்காணிப்பாளர் கைதுசெய்த  லஞ்ச ஒழிப்புத்துறையினர்.

Share via