நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல்  சோதனை ஓட்டம்.

by Editor / 08-10-2023 10:48:14am
நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல்  சோதனை ஓட்டம்.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு வருகின்ற 10 ஆம் தேதி முதல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்க உள்ளது.நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைமுகத்துக்கு சோதனை ஓட்டம் துவங்கியது.முதல்கட்ட சோதனை ஓட்டம் என்பதால் கப்பலின் கேப்டன் பிஜு பி.ஜார்ஜ் தலைமையில் 14 ஊழியர்கள் மட்டுமே கப்பலில் செல்கின்றனர்.இலங்கை செல்லும் கப்பல் இன்று மாலை மீண்டும் நாகை திரும்ப உள்ள நிலையில். இதேபோல நாளையும் சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.துறைமுக நகரம் என்றழைக்கப்படும் நாகை மாவட்டத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள்  கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட இருப்பதற்கு பொதுமக்கள் மற்றும் வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த கப்பல் 25 கோடி ரூபாய் செலவில் சுமார் ஒரு வருடம் கொச்சினில் தயாரிக்கப்பட்ட கப்பல் ஆகும். ஒரு மணிநேரத்திற்கு 36 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது திறன் கொண்டது. (சுற்றுலா பயணிகள் பயணிக்கும் செரியா பாணி சொகுசு கப்பலில் பயணிகளுக்கு தேவையான சிற்றுண்டி, தேநீர், குளிர்பானங்கள், நொறுக்கு தீனிகள்கட்டணம் செலுத்தி பெற்றுக்கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது)

 

Tags : நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு பயணிகள் கப்பல்  சோதனை ஓட்டம்.

Share via

More stories

Logo