குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட சிறப்பு சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்..
சிவகங்கை தாலுகா போலீஸ் நிலையத்தில் சிறப்பு சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் கதிரேசன். இவர் நேற்று முன்தினம் இரவு இவருக்கு மலம்பட்டி சோதனைச் சாவடியில் பணி ஒதுக்கப்பட்டது. அதனை தொடர்ந்து சிறப்பு சார்பு ஆய்வாளர் கதிரேசன் சிவகங்கையில் இருந்து மேலூருக்கு சென்ற நகர்ப்புற பேருந்தில் சாதாரண உடையில் அவர் குடிபோதையிலும் சென்றதாக கூறப்படுகிறது. மேலும் பேருந்தில் சக பயனிகளிடம் அவர் தகராறிலும் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மலம்பட்டி கிராம மக்கள் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவிக்கவே இது குறித்து நடவடிக்கை எடுத்த காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார் குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட கதிரேசனை பணியிட நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.
Tags :