ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர்களிடம் 2,900 கிலோ வெடிப்பொருள்கள் பறிமுதல்

by Admin / 11-11-2025 01:18:51am
 ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர்களிடம் 2,900 கிலோ வெடிப்பொருள்கள் பறிமுதல்

டெல்லி செங்கோட்டையில் மெட்ரோ ரயில் நிலையம் முதல் வாயில் அருகே கார் ஒன்று பெரும் சப்தத்தோடு வெடித்து சிதறியது ..இதனைத் தொடர்ந்து அருகில் இருந்த பத்துக்கு மேற்பட்ட கார்கள் தீப்பிடித்து எரிந்தன.. 9 பேர் பலியாகி உள்ளனர்... இந்நிகழ்வு மாலை ஆறு முப்பது  மணிக்கு மேல் நடந்தேறி உள்ளது. தீயணைப்புத் துறை தீயை கட்டுப்படுத்தும் பணியிலும் காவல்துறையினர் கார் வெடிப்பிற்கான காரணத்தை அறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சம்பவம், இந்திய அளவில் மிகப்பெரிய ஒரு அதிர்வலையை உருவாக்கி உள்ளது ....இந்நிலையில், அரியானா பரிதாபாத் அருகே காவல்துறையினர் சோதனையிட்ட பொழுது 360 கிலோ வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

 திங்கட்கிழமை , ஃபரிதாபாத்தில் போலீசார் ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர்களை கைது செய்து, வெடிபொருட்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் அம்மோனியம் நைட்ரேட் உட்பட 2,900 கிலோவுக்கும் அதிகமான பொருட்களை பறிமுதல் செய்தனர்.. டெல்லி குண்டுவெடிப்பில் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்பதை அறிய கைது செய்யப்பட்ட மருத்துவர்களிடம் புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்... 

..டெல்லி செங்கோட்டையை சுற்றி பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ..காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்... துப்பாக்கி ஏந்திய வீரர்கள் டெல்லி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் .மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளார்... ஒன்பது பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது, மேலும் டெல்லி, மும்பை மற்றும் பல மாநிலங்களில் உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது... அனைத்து சாத்தியக்கூறுகளும் ஆராயப்பட்டு வருவதாகவும், தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) மற்றும் தேசிய பாதுகாப்புப் படை (NSG) உள்ளிட்ட உயர் நிறுவனங்கள் விசாரணையில் ஈடுபட்டுள்ளதாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்...
 

 

Tags :

Share via