பா..ம.க கௌரவ தலைவர் ஜி.கே. மணி கட்சி அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கம்
பா.ம.க கௌரவ தலைவர் ஜி.கே. மணி கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக கட்சித் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.. கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டது. கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டது ஆகிய காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 18ஆம் தேதி ஜி..கே.. மணிக்கு ஒழுங்கு நடவடிக்கை குழு மூலம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அதற்கு அவர் தரப்பில் இருந்து உரிய விளக்கம் தரப்படாதால் இன்று முதல் அவர் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .நீக்கப்பட்ட ஜி . கே மணியுடன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் யாரும் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அன்புமணி வேண்டுகோள் விடுத்துள்ளார் .கடந்த சில மாதங்களாகவே பா.ம.க நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே நிலவி வரும் அதிகார போட்டியில் ஜி.கே. மணி ராமதாஸ் தரப்புக்கு ஆதரவாக உள்ளாா். இதனிடையே பா.ம.க.விலிருந்து நீக்கப்பட்ட ஜி.. கே. .மணி தன்னை நீக்குவதற்கு அன்புமணிக்கு அதிகாரம் கிடையாது என்றும் தன்னால் தான் அவர் கட்சிக்குள் வந்தார் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் டாக்டர் ராமதாஸ் அன்புமணிக்கு எதிராக பகிரங்கமாக நோட்டீஸ் ஒன்று விட்டுள்ளார்.
Tags :

















