அனுமதியின்றி ஆர்பாட்டம் செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது. 

by Editor / 17-11-2024 07:38:28pm
 அனுமதியின்றி ஆர்பாட்டம் செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது. 

 அர்ஜுன் சம்பத்தின் மகன் ஓம்கார் பாலாஜி  நக்கீரன் கோபாலை மிரட்டும் வகையில் பேசியதாக கைது செய்யப்பட்டு இருக்கிறார்.இதனை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதாக இந்து மக்கள் கட்சி அறிவித்திருந்தது.ஆனால் போராட்டம் நடத்துவதற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. ஆயினும் இந்து மக்கள் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக கூடினர். அங்கு அர்ஜுன் சம்பத் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார் இதைத்தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்தனர்.

 

Tags :  அனுமதியின்றி ஆர்பாட்டம் செய்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது 

Share via

More stories