அப்பல்லோ மருத்துவமனைக்கு கேரள முதல்வர் வருகை

by Editor / 09-09-2022 11:19:09am
அப்பல்லோ மருத்துவமனைக்கு கேரள முதல்வர் வருகை

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணனைப் பார்க்க கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று காலை சென்னை வந்தார்.

இன்று மாலை வரை முதல்வர் பினராயி விஜயன் சென்னையில் இருப்பார். உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட கொடியேரி பாலகிருஷ்ணன் சிறப்பு சிகிச்சைக்காக ஆகஸ்ட் 29ஆம் தேதி அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.முதல்வர் ஆலோசனையின் பேரில் கொடியேரியை சென்னையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது.

 

Tags :

Share via