திடீரென ஜெயக்குமார் வீட்டிற்குச் சென்ற ப.சிதம்பரம்

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்த ஜெயக்குமார் தனசிங் மர்மமான முறையில் எரிந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், ஜெயக்குமார் தனசிங்கின் வீட்டிற்கு இன்று (மே 11) முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சென்றுள்ளார். அங்கு ஜெயக்குமாரின் சகோதரர் செல்வராஜ் மற்றும் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
Tags :