வாகன பேரணியில் கலந்துகொள்ளும் கெஜ்ரிவால்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜூன் 1ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி, திஹார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த கெஜ்ரிவால் இன்று தெற்கு டெல்லியில் நடைபெறும் வாகன பேரணியில் கலந்து கொள்கிறார். தொடர்ந்து, கன்னாட் பிளேசில் உள்ள அனுமான் கோயிலுக்குச் சென்று சிறப்பு வழிபாடு நடத்த உள்ளார். அதன் பிறகு பகல் ஒரு மணி அளவில் ஆம் ஆத்மி அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
Tags :