அமெரிக்க குடிமக்கள் ஈராக்கிற்கு செல்ல வேண்டாம்

by Staff / 23-10-2023 01:16:55pm
அமெரிக்க குடிமக்கள் ஈராக்கிற்கு செல்ல வேண்டாம்

ஈராக்கில் உள்ள அமெரிக்க வீரர்கள் மற்றும் பணியாளர்கள் மீது சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குப் பிறகு அமெரிக்க குடிமக்கள் ஈராக்கிற்கு செல்லக்கூடாது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை கூறியது. "பயங்கரவாதம், கடத்தல், ஆயுத மோதல்கள், உள்நாட்டு கலவரம் போன்ற காரணங்களால் ஈராக்கிற்கு பயணம் செய்ய வேண்டாம்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது. காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே மோதல் தொடங்கியதில் இருந்து ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன என்று வெளியுறவுத்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via
Logo