தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மன நோயாளிகள் என நடிகரும், இயக்குனருமான சமுத்திரக்கனி தென்காசியில் கடும் விமர்சனம்
தென்காசி மாவட்டம் இலஞ்சி செல்லும் சாலையில் உள்ள பிரபல தனியார் உணவகத்தை நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி திறந்து வைத்து குத்து விளக்கு ஏற்றி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறுகையில், தற்போது மலையாள படம் ஒன்றில் நடித்து வருவதாகவும் ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் திரைப்படம் ஒன்று இயக்க உள்ளதாகவும் அது குறித்தான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார். தொடர்ந்து சூரி நடித்துள்ள கருடன் திரைப்படம் குறித்து சமுத்திரக்கனி கூறுகையில், நடிகர் சூரி கடுமையான உழைப்பாளி இன்னும் பல வெற்றிகளை சந்திப்பார் என புகழாரம் சூட்டினார்.
தற்போது திரையுலகில் ஒருவருக்கொருவர் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்பவர்கள் மனநோயாளிகள் அதனை கடந்து செல்ல வேண்டும்.ஆணவ கொலைகள் தொடர்பான கேள்விக்கு, தனி மனிதனின் மனதில் மாற்றம் உருவாக வேண்டும், அதோடு குழந்தைகளுக்கு நல்வற்றை கற்று கொடுப்பதன் வாயிலாக வருங்கால தலைமுறை மாறும் என கூறினார்.மேலும் கூறிய அவர், கிராம புறங்களில் சினிமாவின் முதல் காட்சிக்கான வரவேற்பு குறைந்துள்ளது பார்க்கின்ற பொழுது மனதிற்கு கஷ்டமாக உள்ளது. ஆனால் தமிழ் சினிமாவை கொண்டாடும் ரசிகர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமா வளர்ந்து கொண்டே இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
Tags :



















