செயல்பாட்டில் இல்லாத தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

by Staff / 20-05-2022 11:24:07am
செயல்பாட்டில் இல்லாத தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு

கடலூர் மாவட்டத்தில் செயல்பாட்டில் இல்லாத தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர் பெரியகுப்பம் மற்றும் காயல்பட்டு பகுதியில் தானே புயலால் பாதிக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் உள்ளது.இந்த நிலையம் தற்போது  செயல்பாட்டில் இல்லை  இந்த தொழிற்சாலையில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள தளவாட சாமான்கள் மர்ம நபர்கள் கொள்ளையடித்து செல்வதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தொழிற்சாலைக்கு மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததால் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்த நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo