என்கவுன்டரில் பிரபல ரவுடி கொலை

by Staff / 22-11-2023 03:28:30pm
என்கவுன்டரில் பிரபல ரவுடி கொலை

திருச்சியைச் சேர்ந்த பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் என்பவர் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார். சனமங்கலம் அருகே ஜெகனை பிடிக்க முயன்றபோது காவல் உதவியாளர் வினோத்தை தாக்கிவிட்டு தப்ப முயன்றுள்ளார். அப்போது போலீசார் பலமுறை எச்சரித்தும் அவர் கேட்காமல் தப்ப முயன்றதால் சுட்டுக் கொல்லப்பட்டார். என்கவுன்ட்டரில் கொல்லப்பட்ட ஜெகன் மீது திருவெறும்பூர், லால்குடி உள்ளிட்ட காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, வழிப்பறி வழக்குகள் உள்ளன.

 

Tags :

Share via