திமுக வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் திமுககாரன் கரைவேட்டியை கட்டி கெத்தாக வருவார்கள்.

by Admin / 04-10-2026 12:15:57am
 திமுக  வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் திமுககாரன் கரைவேட்டியை கட்டி கெத்தாக வருவார்கள்.

மதுராந்தக இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் பரந்தானை ஆதரித்து பரப்புரை நிகழ்த்திய முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் முதலமைச்சர் விஜய் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.தமிழக வெற்றி கழகம் நிறைவேற்றும் ஒவ்வொரு திட்டமும் திமுகவின்  திட்டமே. மகளிர் உரிமைத் தொகை, காலை உணவு திட்டம், இலவச பேருந்து பயணம், நான் முதல்வன் திட்டம் என பல்வேறு திட்டங்களை திமுக நிறைவேற்றி உள்ளது என்றும் திமுக நிறைவேற்றிய திட்டங்களை சொன்னால் மக்கள் வரிப்பணம் தானே? உங்கள் காசா என்று கேட்கிறார்கள். நான் கேட்கிறேன். தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் மூலம் மோதிரங்கள் வழங்குகிறீர்களே? அது உங்க அப்பன் வீட்டு காசா? ,மக்கள் வரிப்பணம் தானே?  கரிகாலன் கல்லணையைக் கட்டினான் என்றால் கரிகாலனா கொத்தனார் வேலையை செய்தார். ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்கக்கூடிய தஞ்சாவூர் கோவிலை கட்டியவன் ராஜராஜ சோழன் என்று சொன்னால் ராஜராஜனா கோவிலை கட்டினார் என்றும் கேள்வி எழுப்பினார்..இங்கே முதலமைச்சா் ஆக்கிய மக்களுக்கு நன்மை செய்யமுடியவில்லை.இதில் டெல்லி அரசியலுக்கு போறதாசெய்தி வருது.முதலில் உள்ளூர் பிரச்சனைகளை தீர்த்து விட்டு டெல்லிக்கு அல்லது அமெரிக்காவிற்கு அதிபராக கூட ஆகுங்கள் என்றும் காட்டமாக பேசியதோடு திமுக தேர்தல் நேரத்தில் தமிழக வெற்றிக்கழகத்தை சாதாரணமாக நினைத்து விட்டோம். எஸ் ஐ ஆர் பிரச்சனை போன்ற முக்கிய பிரச்சனைகளில் கொள்கை ரீதியாக போராடினமே தவிர இவர்களை கவனத்தில் கொள்ளாதது நாம் செய்த மிகப்பெரிய தப்பு. திமுக யாருக்கும் அஞ்சாது என்றும் திமுக தொண்டர்கள் வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் திமுககாரன் கரைவேட்டியை கட்டி கெத்தாக வருவார்கள் என்றும் நேற்று மதுராந்தகத்தில் சூட்டிங் நடத்தி விட்டுப் போய்விட்டார். ஒரு டீ கடையில் உட்கார்ந்து டீ குடித்து விட்டு 500 ரூபாய் கொடுக்கிறார். விலைவாசி உயர்வுகளை எல்லாம் அவருக்கு தெரியவில்லை என்றும் நான்கு மாதங்களுக்கு முன்னால் விலைவாசி எவ்வளவு குறைவாக இருந்தது. இப்பொழுது எல்லாமே இரண்டு மடங்கு மூன்று மடங்காக விலை கூடிவிட்டது என்றும் மதுராந்தக மக்கள் ஏமாளிகள் என்று நினைத்து தான் அதிமுக மூலம் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்கு சென்றவரை ராஜினாமா செய்ய வைத்து தன் கட்சியில் இணைத்துக் கொண்டு இப்பொழுது  வேட்பாளராக நிறுத்தி இருக்கிறார் .அவருக்கு தக்க பாடம் தர வேண்டும். இதில் ,நீங்கள் கவனக் குறைவாக இருந்தால் இந்த குதிரை பெற அரசியலையே அவர்கள் தொடர்ந்து செய்வார்கள் என்றும்அவர் போட்டியிட்டு வெற்றி பெற்றபெரம்பூர் தொகுதிக்கு ஒரு முறைதான் போயிருக்கிறார். ஆனால், மதுராந்தகத்திற்கு இரண்டு முறை வந்து விட்டார். அவர் வெற்றி பெற்றால் இனி இந்த பக்கம் வரமாட்டார் என்றும் அவருடைய பெரம்பூர் தொகுதியில் மின்சாரம் இன்றி மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். அவரைப்பற்றி பெரம்பூர் மக்களிடம் கேட்டுப் பாருங்கள் என்றும் தெரிவித்தார்..

 

 திமுக  வெற்றி பெற்றாலும் தோல்வியுற்றாலும் திமுககாரன் கரைவேட்டியை கட்டி கெத்தாக வருவார்கள்.
 

Tags :

Share via
Logo