இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது அமைச்சரவை விரிவாக்கம்
இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது அமைச்சரவை விரிவாக்கம் கிண்டி ஆளுநர் மக்கள் மாளிகை அரங்கத்தில் நடைபெற்றது. விஜய் முதலமைச்சராக பதவியேற்ற பொழுது 9 பேர் கொண்ட அமைச்சரவை பதவியேற்றது. அதனை அடுத்து அமைச்சரவை விரிவாக்கம் இன்று நடைபெற்றது ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் பதவி பிரமாணம் செய்து வைத்தார். தமிழக வெற்றி கழகத்தைச் சேர்ந்த 21 பேரும் காங்கிரசைச் சார்ந்த இருவரும் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டனர். மொத்தம் 33 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்று கொண்டுள்ளனர். இந்நிலையில் அரசுக்கு ஆதரவு நல்கி உள்ள இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் விடுதலைச் சிறுத்தை கட்சியும் அமைச்சரவையில் பங்கேற்பதற்கான நிர்வாகக் குழு கூட்டத்தை இன்று நடத்திக் கொண்டிருக்கின்றன இந்த கூட்டத்திற்கு பிறகு அமைச்சரவையில் பங்கேற்கலாமா வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்பட்டு அதன் வலி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டின் போதே கூட்டணி ஆட்சி என்கிற ஒரு அறிவிப்பை செய்திருந்தார். அதன்படியே இன்று அதை அவர் நிறுவனப்படுத்தி உள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தோடு தேர்தலில் கூட்டணி கட்சிகளாக நின்று வெற்றி பெற்றவர்கள் இந்த கூட்டணியில் இல்லை. தமிழக வெற்றி கழகம் தேர்தலில் 108 இடங்களை வென்று திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தை ,கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டு, இந்திய முஸ்லிம் லீக் என்று ஆதரவை பெற்று ஆட்சி அமைத்துக் கொண்டிருக்கின்றது. இந்நிலையில்தான், அவர்களோடு காங்கிரஸ் கட்சி ஆதரவு நல்கி ஆட்சியில் பங்கேற்று உள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆட்சியில் பங்கேற்க மாட்டோம் என்று சொன்னதோடு அமைச்சர்கள் பதவியும் அவர்கள் பெறவில்லை. வெளியில் இருந்து ஆதரவு என்கிற நிலையிலிருந்து விடுதலை சிறுத்தை கட்சியும் இந்திய முஸ்லிம் லீக் கட்சியும் தற்பொழுது ஆலோசனையில் உள்ளது. மக்களின் பெரும் ஆதரவோடு தனித்து நின்ற முதல் தேர்தலிலே வெற்றி பெற்ற தமிழக வெற்றி கழகம் தங்களுடைய கட்சியைச் சேர்ந்த 16 பேரை அமைச்சர்களாக ஆக்கி உள்ளது. இவர்கள் அனைவரும் புதிதாக எம்எல்ஏ மக்களாக அமைச்சர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
Tags :


















