பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரிப்பு

by Staff / 27-04-2023 01:49:02pm
பீர் விற்பனை 40 சதவீதம் அதிகரிப்பு

புதுச்சேரி  என்றவுடன் எல்லாருக்கும் நினைவுக்கு வருவது மது வகைகள் தான். இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு மது வகைகள் வெளிநாட்டில் இருந்து தரப்படும் மது வகைகள் என சுமார் 900 பிராண்ட் மது வகைகள் புதுவையில் விற்பனையாகிறது.புதிய பிராண்டு மது வகைகளை ருசிப்பதற்காக நாடு முழுவதும் இருந்தும், பிரெஞ்சு காலனி நாடுகளின் பகுதிகளில் இருந்தும் மக்கள் புதுவைக்கு படையெடுத்து வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் மது வகைகளை விட குளிர்ச்சியான பீர்க்குகள் அதிகமாக உள்ளது.இந்தியாவில் தயாரிக்கப்படும் வெளிநாட்டு பீர் மட்டுமல்ல வெளிநாடுகளில் இருந்து வரும் பீர் வகைகளும் புதுவையில் விற்பனை ஆகிறது. 33 பிராண்ட் பீர்கள் புதுவையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் 5 வருடங்கள் வெளிநாடுகளில் இருந்து நேரடியாக வருபவையாகும்.
கோடை காலம் தொடங்கி விட்டாலும், கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து இருப்பதாலும் மது பிரியர்கள் பீருக்கு தற்போது மாறி உள்ளனர்.புதுவையின் அண்டை மாநிலமான தமிழகத்தின் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தெலுங்கானா, ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் பீரை ருசி பார்க்கின்றனர். இதனால் பீர் விற்பனை அதிகரித்துள்ளது.

 

Tags :

Share via