ரஷியாவிற்கு ஐ.நா சபை வலியுறுத்தல்

by Admin / 01-03-2022 02:06:18pm
 ரஷியாவிற்கு ஐ.நா சபை வலியுறுத்தல்

உக்ரைன் ரஷியா இடையேயான போர் 5-வது நாளாக தொடரும் நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அவசர கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கியது.

இதில் பேசிய ஐ.நா.பொதுச்செயலாளர் ஆன்டோனியோ குட்டரெஸ்,  உக்ரைன் மீதான ரஷியாவின் ராணுவ தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்தார்.
 
போர் நடவடிக்கையால் அப்பாவி பொதுமக்கள் பலியாவதாகவும், இதனால் ரஷிய ராணுவ வீரர்கள் திருப்பி செல்ல வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பொதுமக்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும்,  உக்ரைனுக்கு மனிதாபிமான உதவிகள் வழங்கப்பட வேண்டியது அத்தியாவசிய தேவையாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

சமாதானம் மட்டுமே இந்த பிரச்சினைக்கான தீர்வாக இருக்கும் என்றும்,  உக்ரைனுக்கு ஐ.நா.சபை தொடர்ந்து உதவி செய்யும், அவர்களை கைவிடாது எனவும் அவர் குறிப்பிட்டார். உக்ரைன் மக்களுக்கு  மனிதாபிமான உதவிகளை வழங்குவோம் என்று அந்நாட்டு அதிபருக்கு தாம் உறுதி யளித்துள்ளதாகவும்  ஐ.நா.பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷியா-உக்ரைன் இடையே உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும், தூதரக ரீதியிலான பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற வேண்டும் என்று ஐ.நா. சபை கூட்டத்தில் பங்கேற்ற நாடுகளின் ஒட்டு மொத்த கருத்ததாக
தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via