தெற்கு ரயில்வே பண்டிகை கால முன்பதிவு சிறப்பு ரயில்கள்
தெற்கு ரயில்வே பண்டிகை கால முன்பதிவு சிறப்பு ரயில்கள்
ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் சபரிமலை தரிசனம் மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கீழ்க்கண்ட முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகிறது.
சென்னை எம்.ஜி.ஆர் சென்ட்ரல்-கொல்லம் (வண்டி எண்: 06007) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் வருகிற டிசம்பர் மாதம் 3, 10, 17, 24, 31-ந் தேதி மற்றும் ஜனவரி மாதம் 7, 10, 12, 14-ந் தேதிகளில் மாலை 4 மணிக்கு சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக கொல்லம்-சென்னை எம்.ஜி.ஆர் (06008) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் வருகிற டிசம்பர் மாதம் 5, 12, 19, 26-ந் தேதி மற்றும் ஜனவரி மாதம் 2, 9, 11, 13, 16-ந் தேதிகளில் காலை 11.30 மணிக்கு கொல்லம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
சென்னை எழும்பூர்-நாகர்கோவில் (06005) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்புரயில் வருகிற டிசம்பர் மாதம் 23-ந் தேதி மதியம் 3.30 மணிக்கு எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக நாகர்கோவில்-எழும்பூர் (06006) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் வருகிற டிசம்பர் மாதம் 24-ந் தேதி மதியம் 3.10 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
நாகர்கோவில்-தாம்பரம் (06004) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் வருகிற டிசம்பர் மாதம் 26-ந் தேதி இரவு 7.30 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். மறுமார்க்கமாக தாம்பரம்-நாகர்கோவில் (06603) இடையே முன்பதிவு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் வருகிற டிசம்பர் மாதம் 27-ந் தேதி மாலை 4 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்.
Tags :