சென்னை பல்கலைகழகத்தில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது. நேரடி தேர்வுகள் மட்டுமே-துணை வேந்தர் கௌரி

by Editor / 23-12-2021 06:26:10pm
சென்னை பல்கலைகழகத்தில் இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது. நேரடி தேர்வுகள் மட்டுமே-துணை வேந்தர் கௌரி

சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் கௌரி இன்று  செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர் செய்தியாளர்கள் மத்தியில் பேசும்போது:
சென்னை பல்கலைகழகத்தில் இன்று நடைபெற்ற சிண்டிகேட் கூட்டத்தில் செனட் உறுப்பினர்கள் பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. இந்த குழு முறைகேடு விவகாரத்தில் என்ன நடந்தது, எப்படி நடந்தது என ஆய்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.. ஓரிரு வாரங்களில் முறைகேடு விவகாரத்தில் விசாரனை குழு அமைக்கப்படும்.சென்னை பல்கலைகழகத்தின் சார்பில் புதிய பாட பிரிவுகள், ஆராய்ச்சி வகுப்புகள் துவங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இது மற்ற கல்லூரிகளுக்கும் வழங்கப்படும்.இனி ஆன்லைன் தேர்வுகள் கிடையாது. நேரடி தேர்வுகள் மட்டுமே நடைபெறுமென்றும் அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via