கலைஞருடனான நினைவலைகளை பகிர்ந்த கமல்ஹாசன்

by Staff / 21-09-2023 12:25:28pm
கலைஞருடனான நினைவலைகளை பகிர்ந்த கமல்ஹாசன்

விகடன் பிரசுரம் நடத்திய ‘கலைஞர் 100 - விகடனும் கலைஞரும்’ நூல் வெளியீட்டு விழாவில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் கலந்துகொண்டார். இது பற்றி ட்வீட் செய்துள்ள அவர், நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விகடன் குழும நிர்வாக இயக்குனர் பா.சீனிவாசன், தி இந்து குழுமத்தின் இயக்குனர் என்.ராம், தினமலர் நாளிதழின் அசோசியேட் எடிட்டர் கிருஷ்ணமூர்த்தி, விகடன் ஆசிரியர் தி.முருகன் ஆகியோருடன் கலந்துகொண்டேன். முதலமைச்சரிடம் இருந்து, முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடனான எனது நினைவலைகளைப் பகிர்ந்துகொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via