நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் தீ விபத்து.. 25 பேர் பலி

நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் சுமார் 25 பேர் உயிரிழந்தனர். சீனாவின் வடக்கு ஷான்சி மாகாணத்தில் உள்ள நிலக்கரி நிறுவனம் ஒன்றின் அலுவலக கட்டிடத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நான்கு மாடிக் கட்டிடத்தில் வியாழக்கிழமை அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. கட்டிடத்தில் இருந்த 25 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Tags :