லூதுவேனியா மக்கள் போராட்டம்

உக்ரைன் எல்லையில் கடந்த சில வாரங்களாகவே ரஷ்யா தொடர்ந்து வீரர்களை குவித்து வந்தநிலையில், நேற்று உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டு மழையை பொழிந்தனர்.
இதனால் உக்ரைன் நிலைகுலைந்து போய் உள்ளது. இந்த தாக்குதல் படைவீரர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
உக்ரனை ரஷ்ய படைகள் தாக்கி வரும் நிலையில் அண்டை நாடான லிதுவேனியா நாட்டு மக்கள் உக்ரைனுக்கு ஆதரவாக இரவு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் செல்போன் விளக்குகளை ஒளிர செய்து உக்ரைன் மக்களுக்கா ஆதரவு அளிப்பதாக தெரிவித்தனர்.
Tags :