"வினேஷ் போகத்துக்கு வெள்ளி வென்றவருக்கான மரியாதை வழங்கப்படும்"

by Staff / 08-08-2024 12:13:18pm

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்துக்கு வெள்ளிப் பதக்கம் வென்றவருக்கான மரியாதை வழங்கப்படும் என ஹரியானா அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக் ஹரியானா முதலமைச்சர் நயாப் சிங் சைனி வெளியிட்டுள்ள அறிக்கையில், "நாடு திரும்பும் வினேஷ் போகத்துக்கு, வெள்ளிப் பதக்கம் வென்ற வீரருக்கு வழங்கப்படும் வரவேற்பும், மரியாதையும் வழங்கவும், வெகுமதி மற்றும் வசதிகள் செய்து தருவதற்கு அரசு முடிவு செய்துள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via