நிலவை நெருங்கும் சந்திரயான்-3

by Staff / 09-08-2023 05:36:07pm
நிலவை நெருங்கும் சந்திரயான்-3

சந்திரயான் 3 விண்கலத்தின் சுற்றுவட்டப் பாதை மேலும் குறைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்ட குறிப்பில், "சந்திரனின் மேற்பரப்புக்கு விண்கலம் இன்னும் நெருக்கமாகி உள்ளது. சுற்றுப்பாதை 174 கிலோமீட்டர் x 1437 கிலோமீட்டர் ஆக குறைக்கப்பட்டது. அடுத்தக்கட்ட நடவடிக்கை ஆகஸ்ட் 14 ஆம் தேதி அன்று காலை 11:30 முதல் 12:30 மணிக்குள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆகஸ்ட் 23 ஆம் தேதி நிலவின் மேற்பரப்பில் சந்திராயன் 3 லேண்டரை தரையிறக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

 

Tags :

Share via