அதிமுக மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க நீதிமன்றம் உத்தரவு
மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கு உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதிமுக சார்பில் வரும் 20ஆம் தேதி மதுரையில் மாபெரும் மாநாடு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாநாட்டுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி நாகர்ஜூன், சட்டம் - ஒழுங்கு பிரச்சனை மற்றும் போக்குவரத்து பாதிப்பு ஏற்படாதவாறு மாநாட்டிற்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
Tags :



















