வீட்டுஎரிவாயு கார்களுக்கு ஏற்றி விற்பனை மெக்கானிக்மீதுவழக்கு

by Editor / 24-04-2025 05:27:56pm
வீட்டுஎரிவாயு கார்களுக்கு ஏற்றி விற்பனை மெக்கானிக்மீதுவழக்கு

கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா வைரமடை பகுதியில், தென்னிலை காவல் நிலைய சோதனை சாவடிக்கு பின்புறம் உள்ள தனியார் ஆட்டோ ஒர்க்ஸ் உரிமையாளர் D. பிரபு என்பவர் சட்டவிரோதமாக சமையல் எரிவாயுவை நான்கு சக்கர வாகனங்களுக்கு ஏற்றி பல வருடங்களாக தொழில் செய்து வந்துள்ளார்.அது தொடர்பான வீடியோ ஆதாரங்கள் சமூக வலைதளத்தில் வெளியிடப்பட்டது.அதைத்தொடர்ந்து Food Cell அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்ததில் 3 சமையல் எரிவாயு சிலிண்டரை கைப்பற்றியுள்ளார்கள்.மேலும் அது சம்பந்தமாக முதல் தகவல் அறிக்கையும் (FIR) பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

Tags :

Share via