புயல் எச்சரிக்கை எதிரொலி: நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

by Editor / 26-05-2025 10:36:30pm
புயல் எச்சரிக்கை எதிரொலி: நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை.

அரபிக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 
தற்போது கடல் பகுதியில் காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் என்பதால் வானிலை மைய அறிவிப்பை அடிப்படையாக கொண்டு நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 
இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களான கூத்தங்குழி, கூட்டப்பனை, பஞ்சல், இடிந்தகரை, கூடங்குளம், கூடுதாழை, உவரி உள்ளிட்ட 9 கிராம மக்கள் இன்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் சுமார் 1,200 நாட்டுப்படகுகள் கடற்கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் இந்த தடையால் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

 

Tags : புயல் எச்சரிக்கை எதிரொலி: நெல்லை மாவட்டத்தில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை

Share via

More stories