பாஜக கட்சிப் பணிகள் - ஹெச்.ராஜா தலைமையில் குழு

by Staff / 30-08-2024 01:15:03pm
பாஜக கட்சிப் பணிகள் - ஹெச்.ராஜா தலைமையில் குழு

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை 3 மாத மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றுள்ள நிலையில், கட்சிப் பணிகளை ஒருங்கிணைக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. பாஜக மூத்த தலைவரான ஹெச்.ராஜா தலைமையில் 5 உறுப்பினர்களுடன் தமிழக பாஜக ஒருங்கிணைப்புக் குழுவை கட்சியின் தேசிய தலைமை அறிவித்துள்ளது. இதில், மாநில துணைத் தலைவர்கள் எம்.சக்கரவர்த்தி, கனகசபாபதி, மாநில செயலாளர்கள் முருகானந்தம், ராம ஸ்ரீநிவாசன், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் இடம்பெற்றுள்ளனர்.

 

Tags :

Share via