நீரில் மூழ்கி நர்ஸ் உயிரிழப்பு
மதுரை ஆத்திகுளம் ஏஞ்சல் நகரை சேர்ந்தவர் சுல்தான் அலாவுதீன் மனைவி வனிதா பானு(36). இவர் தேனி மாவட்டம் பெரியகுளம் அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை பார்த்து வந்தார்.அங்கிருந்து மாற்றலாகி மதுரை அரசு மருத்துவமனைக்கு வேலைக்கு சேர்ந்து மூன்று மாதங்கள் ஆகிறது. இந்நிலையில் ராஜாக்கூர் எழுங்கிப்பட்டி கல்குவாரி பள்ளத்திற்கு குளிக்க சென்றார்.
அப்போது கால் தடுமாறி தண்ணீரில் விழுந்து மூழ்கி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அவரது மகன் முகம்மது தபீக் ஒத்தக்கடை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வனிதா பானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், அவரது சாவு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :
















.jpg)


