குஜராத்தில் பயிற்சி விமானம் விழுந்து விபத்து

by Editor / 22-04-2025 04:03:57pm
குஜராத்தில் பயிற்சி விமானம் விழுந்து விபத்து

குஜராத்தில் பயிற்சி விமானம் விழுந்து நொறுங்கிய விபத்தில் விமானி உயிரிழந்தார். தனியார் பயிற்சி மையத்தின் விமானம் குஜராத் மாநிலம் அம்ரேலியில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது கீழே விழுந்து நொறுங்கியது. விமானம் கீழே விழுந்தவுடன் இரண்டாக உடைந்து நொறுங்கியது. விபத்து குறித்த தகவல் அறிந்து தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். தீப்பிடித்த விமானம் உடனடியாக அணைக்கப்பட்டது. விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது

 

Tags :

Share via