தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நீக்கப்பட்டதற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம்
டெல்லி பல்கலைக்கழகம் தமிழ் எழுத்தாளர் பாமா மற்றும் கவிஞர் சுகிர்தராணி ஆகியோரின் படைப்புகளை மீண்டும் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் சேர்க்க வேண்டுமென முதலமைச்சர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்லி பல்கலைக்கழகத்தின் ஆங்கிலப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றிருந்த தமிழ் எழுத்தாளர் பாமா அவர்களின் சங்கதி மற்றும் தமிழ்க் கவிஞர் சுகிர்தராணி அவர்களின் கைம்மாறு, என்னுடல் ஆகிய மொழியாக்கப் படைப்புகள் நீக்கப்பட்டுள்ளதை கண்டித்துள்ளார்.
துறைப் பேராசிரியர்களின் கவனத்துக்கு கொண்டு செல்லாமல், மேற்பார்வைக்குழு ஆலோசனையின் பேரில் பல்கலைக் கழக நிர்வாகம் பாடங்களை நீக்கியிருப்பது ஒரு தலைபட்சமானது எனவும் அவர் சாடியுள்ளார்.
பெண்கள் உரிமை, ஒடுக்கப்பட்டோர் விடுதலை, மானுட மேன்மை குறித்து பல படைப்புகளை வழங்கி வரும் எழுத்தாளர் பாமா மற்றும் கவிஞர் சுகிர்தராணி படைப்புகளை கட்சி அரசியல் - மதவாதக் கண்ணாடிகள் அணிந்து பார்க்கும் வழக்கத்தைக் கைவிட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
நீக்கப்பட்ட பாடங்களை டெல்லி பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் மீண்டும் சேர்க்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்
Tags :