ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 20 மேற்பட்டோர் உயிரிழப்பு..

by Editor / 22-04-2025 11:41:06pm
ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 20 மேற்பட்டோர் உயிரிழப்பு..

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 20 மேற்பட்டோர் உயிரிழப்பு.ஜம்மு - காஷ்மீர்: பஹல்காம் தாக்குதலுக்கு லஷ்கர் இ தொய்பாவின் நிழல் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

பிரபலமான ரிசார்ட் பகுதிக்கு அருகே பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியானது. சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 20-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், இந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானை தளமாகக் கொண்ட பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ப்ரண்ட் பொறுப்பேற்றுள்ளது. 

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 20 க்கும் மேற்பட்டோர்  உயிரிழப்பு; 13 பேர் காயம்.டைந்துள்ளனர்.பஹல்காம் பகுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப்பயணிகள் எனுவும் தமிழ்நாடு, கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர்கள் எனவும் தகவல்.

ஜம்மு-காஷ்மீர் ஆனந்த்நாக் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டோருக்கு,புதுடில்லி தமிழ்நாடு இல்லத்தில் 24 மணி நேரமும் இயங்கும் சிறப்பு உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது.

 

Tags : ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 20 மேற்பட்டோர் உயிரிழப்பு.

Share via