இளைஞரின் வயிற்றில் 56 பிளேடுகள்

ராஜஸ்தான் மாநிலம் டட்டா பகுதியை சேர்ந்த யஷ்பால் சிங் என்பவர் பாலாஜி பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ரத்த வாந்தி எடுத்ததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அலுவலகத்தில் இருக்கும் நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனடியாக வீட்டுக்கு வந்தனர். உடல்நிலை மோசமாகி கிடந்த யஷ்பாலை மீட்டு, அருகே உள்ள மன்மோகன் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சோனோகிராபி மற்றும் எண்டோஸ்கோபி மூலம் ஆய்வு செய்ததில், அவரது வயிற்றில் கத்திகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அறுவை சிகிச்சை மூலம் 56 பிளேடுகளும் அகற்றப்பட்டன.
Tags :