அருள்மிகு ஸ்ரீ அன்னை சரமாரியம்மன், திருக்கோவில் கொடை விழா

by Admin / 16-08-2023 01:00:40am
அருள்மிகு ஸ்ரீ அன்னை சரமாரியம்மன், திருக்கோவில் கொடை விழா

அருள்மிகு ஸ்ரீ அன்னை சரமாரியம்மன், திருக்கோவில் கொடை விழாவை முன்னிட்டு 21 அக்கனிசட்டி, முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது..

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சரமாரியம்மன் தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ சரமாரியம்மன், அன்னை சரமாரியம்மன் திருக்கோயிலில் ஆடி மாத கொடை விழாவை கடந்த 8ம் தேதி அன்று கால் நட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் சிறப்பு தீபாரணங்கள் நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நாளாக இன்று 21 அக்கனிசட்டி மற்றும் முளைப்பாரி ஊர்வலம் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக சென்று பின்னர் திருக்கோயிலுக்கு வந்தடைந்தது திருவிழா ஏற்பாட்டினை ஸ்ரீ அன்னை சரமாரியம்மன் திருக்கோயில் விழா கமிட்டியாளர் மற்றும் இளைஞரணி சார்பில் செய்திருந்தனர்.

அருள்மிகு ஸ்ரீ அன்னை சரமாரியம்மன், திருக்கோவில் கொடை விழா
 

Tags :

Share via
Logo