முக கவசத்தில் தேசியக்கொடி சின்னமா ? சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு 

by Editor / 04-08-2021 05:19:48pm
முக கவசத்தில் தேசியக்கொடி சின்னமா ? சமூக ஆர்வலர்கள் கொந்தளிப்பு 

 

சுதந்திர தின விழா கொண்டாட்டம் ஆரம்பமாகியிருக்கும் வேளையில்ன் கொரோனா பாதிப்பும் இந்தியாவில் சொல்லொணாத் துயரத்தை உருவாக்கியிருக்கிறது. முகக்கவசம் வழியாக கொரோனாவை விரட்டி விடலாம் என்று அரசு முகக் கவனத்தை வலியுறுத்தி வரும் நிலையில் சில வியாபாரிகள் இதைச் சாக்காக வைத்துக் கொள்ளையடிக்கத் துணிந்து விட்டார்கள்.... 


       முகக்கவசம் அணிந்த பின்பு தூக்கி எறியக்கூடியது.ஆனால், தேசியக்கொடி அப்படியா....? இப்பொழுது எரிகிற வீட்டில் பிடுங்குறது வரை லாபம் என்கிற கதியில் பல நிறுவனங்கள் காசு பார்க்கும் ஆசையில் முகக்கவசத்தில் மூவர்ண கொடி அச்சடித்து வெளியிட்டு காசுபார்க்கத்துவங்கிவிட்டனர்....... 


மதிக்கத்தக்க;நேசிக்கத்தக்க;புனித சின்னமாக இந்தியனின் தேச அடையாளமாக இருக்கும் தேசியக் கொடி சின்னம் முகக்கவசத்தில் அச்சிட்டு வெளியிடுவதைத் தடுக்காவிட்டால்.? எல்லோரும் தெரியாமலே தேசியக் கொடி பொறிக்கப்பட்ட முகக்கவசத்தைத் தூக்கி   குப்பையில் எறியும் அபாயம் நிகழும். மத்திய, மாநில அரசுகள் இதைக் கவனத்தில் எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் விரும்புகின்றனர். இந்த விவகாரம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும்  கொந்தளிப்பை ஏற்படுத்தி  உள்ளது. எனவே இதுபோல் இனியும் யாரும் நம் தேசியக் கொடியை அவமதிப்பதை  உடனே நிறுத்த வேண்டும்.என்பதே அனைவரின் விருப்பமாகும்.

 

Tags :

Share via