அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் வந்தது

by Admin / 23-02-2023 12:05:36pm
அ.தி.மு.க  எடப்பாடி பழனிசாமி  கட்டுப்பாட்டில் வந்தது

கடந்த ஆண்டு ஜீலை மாதம் 11.7.2022 அன்று நடந்த அ.தி.மு.க பொதுக்குழுவில் ஏற்பட்ட பிரச்சனையிலிருந்துநீதிமன்றத்தில் ஒ.பி.எஸ்.- எடப்பாடி பழனிசாமி அணிகளாக வழக்குகள் தொடரப்பட்டன.உயர்நீதிமன்றத்தில்தீர்ப்புகள் மாறி மாறி வந்து பிரச்சனை நீண்டுகொண்டே சென்றது.இரு அணிகளும் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடுசெய்து வந்தநிலையில் ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்பு ஒ.பி.எஸ் ,இ.பி.எஸ் அணிகள்தனித்தனியே வேட்பாளர்களை அறிவிக்க..உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு வழக்கு வந்தது..நீதி மன்றம் கூறிய அறிவுரைபடி ஒ.பி.எஸ்.அணி வேட்பாளரை திரும்ப பெற்றார்.அ.தி.மு.க வேட்பாளர் தென்னரசு நிறுத்தப்பட்டு,இரட்டைஇலை சின்னத்தை  தேர்தல் ஆணையம் வழங்கியது.இந்நிலையில் ,இன்று உச்சநீதிமன்றததில் தீர்ப்பு எடப்பாடி பழனிசாமி அணிக்கு சாதகமாக தீர்ப்பை வழங்கியது.அதில் பொதுக்குழுக்கூட்டியது செல்லும் என்றும் இடைக்கால பொதுச்செயலாளர் பதவிக்கு எடப்பாடி பழனிசாமியைத்தேர்வு செய்தது சரியே என்று தீர்ப்பு வழங்கி எடப்பாடி பழனிசாமிஅணியே அ.தி.மு.க என்று உறுதிபடுத்தியது.

 

Tags :

Share via