104 வயதில் தேர்வில் முதலிடம்: 89/100 மதிப்பெண் எடுத்து அசத்திய மூதாட்டி!

by Editor / 16-11-2021 08:27:03pm
104 வயதில் தேர்வில் முதலிடம்: 89/100 மதிப்பெண் எடுத்து அசத்திய மூதாட்டி!

ஷக்ஸரத பிரக் ரெஹ்னா என்ற ஒரு திட்டம், கேரளாவில் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில், முதியவர்களுக்கும் பாடம் கற்பிக்கப்படுகிறது. 

படிக்க விரும்பும் முதியவர்களின் வீடுகளுக்கே ஆசிரியர்கள் சென்று அவர்களுக்கு பாடம் கற்பிக்கின்றனர். 

இத்திட்டத்தில் பாடம் பயின்று வந்த முதியவர்களுக்கு, சமீபத்தில் தேர்வு நடத்தப்பட்டது; 104 வயதான குட்டியம்மா என்ற பாட்டி பயின்று வந்துள்ளார். 

கோட்டயம், அய்யர் குன்னம் பகுதியைச் சேர்ந்த குட்டியம்மா பாட்டியும் தேர்வை எழுதியுள்ளார்.

தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், குட்டியம்மா பாட்டி, தேர்வில் 100க்கு 89 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார். 

குட்டியம்மாள் பாட்டி தன் வாழ்நாளில் பள்ளிகூடத்திற்கே செல்லாதவர். இவர் வீட்டில் தற்போது படித்து பள்ளியில் 4ம் வகுப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும் தேர்வில் இவர் தேர்ச்சி பெற்று 89 சதவீத மார்க் வாங்கியுள்ளார். 

இந்த தகவல் அம்மாநில கல்வி மற்றும் தொழிலாளர்கள் அமைச்சர் சிவன் குட்டி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Tags :

Share via