மாப்பிள்ளை புரட்டி எடுத்த மாமியார் மகளை தாக்கியதால் ஆத்திரம் வீதியில் விருந்து வைத்த காட்சிகள்

by Editor / 03-07-2022 01:09:22pm
மாப்பிள்ளை புரட்டி எடுத்த மாமியார் மகளை தாக்கியதால் ஆத்திரம் வீதியில் விருந்து வைத்த காட்சிகள்

மகளை தாக்கிய மாப்பிள்ளை விருந்துக்கு வந்த இடத்தில் மாமியார் வீதியில் வைத்து உருட்டுக்கட்டையால் புரட்டி எடுத்த சம்பவம் கிருஷ்ணகிரி அருகே அரங்கேறியுள்ளது கிருஷ்ணகிரி மாவட்டம்மாத்துர் அடுத்து ஜிம்சன்பட்டியை பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரன் இவர் கடந்த சில ஆண்டுகளாக பெங்களூரில் குடும்பத்துடன் தங்கி கார்பெண்டர் வேலை செய்து வருகிறார் இவருக்கு பிரீத்தா என்ற மனைவியும் 2 குழந்தைகளும் உள்ள நிலையில் போதையில் அடித்து உதைத்ததால் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மனைவியை சமாதானம் பேசி அழைத்து வர ஈஸ்வரன் மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார் மகளை தாக்கியதால் ஆத்திரத்தில் இருந்த தாய் கவிதா தனது உறவினருடன் சேர்ந்து மாப்பிள்ளை ஈஸ்வரனை வீதியில் வைத்து உருட்டுக்கட்டையால் புரட்டி எடுத்தார். ஈஸ்வரன் உடன் வந்த உறவினர் விரட்டி விரட்டி தாக்கிய மாமியார் கவிதா எழுந்து செல்ல முயன்ற மாப்பிள்ளை மீது கல்லெறிந்து எழுந்து நடக்க இயலாமல் செய்தார். இதனால் முகத்தில் ரத்தத்துடன் நடக்க இயலாமல் வீதியில் தவித்த ஈஸ்வரனை அக்கம்பக்கத்தினர் தூக்கிச் சென்று 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். மாமியாரின் ஆவேச தாக்குதலில் ஈஸ்வரனின் காலில் முறிவு ஏற்பட்டது மருத்துவர்கள் பரிசோதனையில் தெரியவந்தது. அவருக்கு கிருஷ்ணகிரி அருகே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது இந்த சம்பவம் வழக்கு பதிவு செய்து வீடியோ ஆதாரங்களை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories