ஏழை குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்காக 6 மணி நேர சைக்கிள் பயணம் செய்த சைலேந்திர பாபு

by Editor / 05-12-2021 03:42:58pm
ஏழை குழந்தைகளின் புற்றுநோய் சிகிச்சைக்காக 6 மணி நேர சைக்கிள் பயணம் செய்த சைலேந்திர பாபு

   
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக 126 கி.மீ. சைக்கிள் பயணம் மேற்கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய  தமிழக டிஜிபி சைலேந்திரபாபு.
 
புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக இன்று பல்வேறு நாடுகளில் மாரத்தான் போட்டி மற்றும் சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. 

இதன் ஒரு பகுதியாக தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு, இன்று காலை சென்னை பெருங்குடியில் இருந்து செங்கல்பட்டு வரை சைக்கிள் பயணம் மேற்கொண்டார். இதனைத்தொடர்ந்து அவர் 6 மணிநேர மாரத்தானில் கலந்துகொண்டார்.
 

 

Tags :

Share via

More stories