by Staff /
10-07-2023
03:26:33pm
கேரளாவில் கிணற்றில் சிக்கிய தமிழக தொழிலாளி இன்று சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன் கிணறு தூர்வாரும் பணியின்போது மண் சரிவு ஏற்பட்டதில் தமிழகத்தை சேர்ந்த மகாராஜா என்பவர் மண்ணுக்குள் சிக்கினார். அவரை மீட்க தீயணைப்புத்துறை கடந்த 50 மணி நேரம் கடுமையாக போராடியது. தமிழக தொழிலாளி மகாராஜாவை உயிருடன் மீட்க வேண்டும் என கேரளாவின் ஒட்டுமொத்த மக்களும் பிரார்த்தனை செய்த நிலையில் இன்று காலை அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
Tags :
Share via